Atlee: அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் மனைவி மகனோடு கலந்து கொண்ட அட்லீ!

Published : Mar 01, 2024, 08:19 PM IST

இயக்குனர் அட்லீ தன்னுடைய மனைவி பிரியா மற்றும் மகனுடன்... முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

PREV
14
Atlee: அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் மனைவி மகனோடு கலந்து கொண்ட அட்லீ!

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவர்  ஆவார்.  இவரின் கடைசி மகனான, ஆனந்த் அம்பானியின் திருமணத்தின் முந்தைய கொண்டாட்டங்கள் தற்போது களைகட்ட துவங்கி உள்ளது. இன்று துவங்கும் இந்த கொண்டாட்டங்கள் மார்ச் 3-ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது.

24

சுமார் 1000 கோடி செலவில் இந்த திருமணத்தை நடத்த அம்பானி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களது திருமணம் மற்றும் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக... ஏராளமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் குஜராதின் ஜாம்நகருக்கு வருகை தந்து  வருகிறார்கள்.

Top 10 TRP: விஜய் டிவிக்கு வந்த சோதனை? புஸுன்னு இறங்கிய சிறகடிக்க ஆசை TRP.. டாப்பில் எந்த சீரியல் தெரியுமா?

34

அந்த வகையில் தமிழில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து 3 விஜய் படங்களை இயக்கி கெத்து காட்டியது மட்டும் இன்றி, அதிரடியாக பாலிவுட் திரையுலகில் நுழைந்து, முதல் படத்திலேயே பாலிவுட் கிங் காங் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்த, இயக்குனர் அட்லீயும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

44

தன்னுடைய மகன் மற்றும் மனைவியுடன் அட்லீ என்ட்ரி கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அட்லீயை தவிர இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான், அமீர் கான், சல்மான் கான், அலியா பட், சைப் அலிகான், உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Read more Photos on
click me!

Recommended Stories