மெய்யழகனை மேலும் அழகாக்கியதற்கு நன்றி! அரவிந்த் சாமி பர்த்டே; ஸ்பெஷல் போஸ்டருடன் வாழ்த்துமழை பொழிந்த சூர்யா

Published : Jun 18, 2024, 12:45 PM IST

அரவிந்த் சாமியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து மெய்யழகன் படத்தின் ஸ்பெஷல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.

PREV
14
மெய்யழகனை மேலும் அழகாக்கியதற்கு நன்றி! அரவிந்த் சாமி பர்த்டே; ஸ்பெஷல் போஸ்டருடன் வாழ்த்துமழை பொழிந்த சூர்யா
Aravind swamy

மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. இதையடுத்து இந்திரா, பாம்பே என குறுகிய காலகட்டத்தில் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்த அரவிந்த் சாமி, சினிமாவில் அறிமுகமான 10 ஆண்டுகளுக்கு ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார். பின்னர் விபத்தில் சிக்கி உடல் எடை அதிகரித்ததால் சினிமா பக்கம் தலைகாட்டாமலே இருந்த அரவிந்த் சாமி பிசினஸில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

24
suriya, aravind Swamy

பின்னர் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்தார் அரவிந்த் சாமி. இதையடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த தனி ஒருவன் படம் தான் அரவிந்த் சாமிக்கு தரமான கம்பேக் படமாக அமைந்தது. அப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டிய அரவிந்த் சாமி, அடுத்ததாக போகன் படத்திலும் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்திருந்தார். பின்னர் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவி போன்ற படங்களில் நடித்தார் அரவிந்த் சாமி.

இதையும் படியுங்கள்... Soori : சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூர்யா தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் சூரி - அதுவும் இவர் டைரக்‌ஷன்லயா?

34
Meiyazhagan movie Poster

அதன்பின்னர் தற்போது அவர் நடிப்பில் மெய்யழகன் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் முதன்மை கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துவரும் இப்படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்குகிறார். இதில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், சரண், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார்.

44
Aravind Swamy Birthday Special Poster

சூர்யாவின் 2டி நிறுவனம் தான் மெய்யழகன் படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமியின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மெய்யழகன் படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, மெய்யழகனை மேலும் ஸ்பெஷல் ஆக்கியதற்கு நன்றி. உங்களுக்கும் கார்த்திக்கும் இடையேயான பந்தத்தை படத்தில் பார்ப்பதற்கு காத்திருக்கிறேன். என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார் சூர்யா.

இதையும் படியுங்கள்... Jason Sanjay in Goat: 'கோட்' படத்தில் தளபதியுடன் நடித்திருக்கும் சஞ்சய்! பட் இந்த ட்விஸ்ட் புதுசு கண்ணா புதுசு

Read more Photos on
click me!

Recommended Stories