- Home
- Gallery
- Soori : சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூர்யா தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் சூரி - அதுவும் இவர் டைரக்ஷன்லயா?
Soori : சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூர்யா தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் சூரி - அதுவும் இவர் டைரக்ஷன்லயா?
சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Soori
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி கலக்கி வந்தவர் சூரி. வெண்ணிலா கபடிக்குழுவில் தொடங்கி அண்ணாத்த வரை ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்து வந்த சூரியை, தன்னுடைய விடுதலை படம் மூலம் ஹீரோவாக்கி அழகு பார்த்தார் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை படத்தில் சூரியின் நடிப்பை பார்த்து பலரும் வியந்து போயினர். ஏனெனில் அப்படத்தில் தனக்குள் இருக்கும் தரமான நடிகனை வெளிக்கொண்டு வந்திருந்தார் சூரி.
Soori Movie Line Up
விடுதலை படத்தின் வெற்றிக்கு பின்னர் சூரிக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்த கருடன் படம் அண்மையில் ரிலீஸ் ஆனது. துரை செந்தில்குமார் இயக்கிய அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இதுதவிர மேலும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார் சூரி.
இதையும் படியுங்கள்... Pooja Hegde: நடிச்ச எல்லா படமும் பிளாப்; ஆனாலும் சம்பளத்தை ஜெட் வேகத்தில் ஏத்தும் ‘சூர்யா44’ நாயகி பூஜா ஹெக்டே
Soori Next Movie Produced by Suriya
அந்த படம் தான் கொட்டுக்காளி, இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். கூழாங்கல் படத்தின் இயக்குனர் வினோத்ராஜ் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. ஆனால் ரிலீசுக்கு முன்பே இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாரட்டுக்களையும் பெற்று இருக்கிறது. மேலும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் சூரி. இப்படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வர உள்ளது.
Soori, Prasanth Pandiyaraj
இப்படி பிசியான ஹீரோவாக வலம் வரும் சூரிக்கு மேலும் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி அவர் ஹீரோவாக நடிக்க உள்ள அடுத்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க உள்ளார். இவர் விமல் நடிப்பில் வெளியாகி ஹிட்டான விலங்கு என்கிற வெப் தொடரை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் ஆவார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... VIJAY: விக்கிரவாண்டி தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு.?விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு