Anna: கடத்தப்பட்ட பரணி! வாயை விட்டு சிக்கிய சௌந்தரபாண்டி... சண்முகம் செய்யப் போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்

First Published | Jun 10, 2024, 3:00 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி ஏகேஎஸ் அண்ணாச்சியை சந்தித்து பரணியை கடத்த சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது பார்க்கலாம் வாங்க.
 

அதாவது சௌந்தரபாண்டி சொன்னதைக் கேட்டு ஏ.கே. எஸ் அண்ணாச்சி உங்க பொண்ணு பரணியை கடத்தணுமா என்று அதிர்ச்சியோடு கேட்க சௌந்தரபாண்டி ஆமா என்று சொல்ல இதை கேட்க செல்வம் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பரணியை கடத்த திட்டமிடுகிறான். 

இதையடுத்து பரணி கிளினிக்கில் கோபமாக உட்கார்ந்து இருக்க அங்கு வந்த சண்முகம் நான் பேசினது தப்பு தான் என்று மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு கூப்பிட பரணி நீ கூப்பிட்டதும் நான் வந்துவிடணுமா என்று கோபப்படுகிறாள். ஒரு முத்தம் கொடு என்று பரணி சண்முகத்துடன் கேட்க சண்முகம் இங்கே எப்படி முடியாது என்று சொல்ல பரணி அப்படின்னா வரமுடியாது என்று ரூமுக்குள் சென்று கதவை சாற்றிக் கொள்ள பின்பக்கமாக வந்த செல்வத்தின் ஆட்கள் பரணியை கடத்திச் செல்கின்றனர். 

Karthigai Deepam: அபிராமியை அலறவிட்ட போன் கால்.! கார்த்திக் கொடுத்த வாக்கு - கார்த்திகை தீபம் அப்டேட்!
 

Tap to resize

பிறகு சண்முகம் ரூமுக்குள் வந்து பார்க்க பரணி அப்பா வீட்டுக்கு போயிட்டு நினைத்துக் கொண்டு வீடு திரும்புகிறான். பிறகு பாக்கியமும் இசக்கியும் சண்முகம் வீட்டுக்கு வந்து பரணி கேட்க பரணி அங்கதானே வந்தா என்று சொல்ல அவ அங்க வரல என்று சொன்னதும் சண்முகம் அதிர்ச்சி அடைகிறான். 

மறுபக்கம் செல்வம் பரணி கடத்திச் சென்று ஒரு குடோனுக்குள் கட்டி வைக்க பரணி என் புருஷன் மட்டும் வந்தா சும்மா விட மாட்டான், எங்க முத்துப்பாண்டி வந்தா உன்னை சுட்டு தள்ளிடுவான் என்று சொல்ல கடத்த சொன்னது உங்க அப்பன் சௌந்தரபாண்டி தான் என்று ஷாக் கொடுக்கிறான் செல்வம். 

Actor Arrested: நான்கு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 'திரிஷ்யம்' பட நடிகர் POCSO சட்டத்தில் கைது!

மேலும் கல்யாணமானத்திலிருந்து உனக்கும் சண்முகத்துக்கும் ஃபஸ்ட் நைட் நடக்கலனு கேள்விப்பட்டேன் நான் இன்னிக்கி நடத்திடுறேன் தப்பாக பேசி பரணியை நெருங்குகிறான். இங்கே சண்முகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பரணியை காணவில்லை என்று சொல்ல இன்ஸ்பெக்டர் ஏற்கனவே சௌந்தரபாண்டி வந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு என்று சொல்கிறார். 
 

Anna serial

பரணி காணாமல் போன விஷயம் எங்களுக்கே இப்பதான் தெரியும் அப்படி இருக்கும் போது சௌந்தரபாண்டிக்கு எப்படி தெரிந்தது? இதில் ஏதோ திட்டம் இருக்கு, முதலில் பரணியை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Charle Son Wedding: நடிகர் சார்லி மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

Latest Videos

click me!