கோகம் பழம் பற்றி தெரியுமா..? இதன் அற்புத நன்மைகள் தெரிஞ்சா விடமாட்டீங்க..

Published : May 20, 2024, 11:53 AM ISTUpdated : May 20, 2024, 12:00 PM IST

கோகம் அகல் பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகவே உள்ளது. அதுமட்டுமின்றி, கிருமி நாசினிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. குறிப்பாக, இந்த பழத்தின் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால், பல அற்புத நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். 

PREV
19
கோகம் பழம் பற்றி தெரியுமா..? இதன் அற்புத நன்மைகள் தெரிஞ்சா விடமாட்டீங்க..

கோகம் பழம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? இது ஆயுர்வேதம் தொடர்பான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பழங்களில் ஒன்றாகும். கோகம் அகல் (Kokum Agal) நம் உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குளிர்ச்சி மற்றும் சுவை கொண்ட இந்த பழம், அதன் செரிமான பண்புகள் காரணமாக பல நூற்றாண்டுகளாக பயன்பட்டில் இருக்கிறது.

29

சிவப்பு நிறத்தில் இருக்கும் புளிப்பு சுவை கொண்ட இந்த பழம் கோகம் பழத்தின் சாறு உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் அற்புத பானமாகும். இந்த பழத்தை சாதாரண பழம் என்று நினைச்சிடாதீங்க..இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகவே உள்ளது. அதுமட்டுமின்றி,  கிருமி நாசினிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. குறிப்பாக, இந்த பழத்தின் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால், பல அற்புத நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். 

39

நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்: நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால், கோகம் பழம் சாப்பிடுங்கள். ஏனெனில், இந்த பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது உங்களை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும்

49

வயிற்றுப்போக்கு பிரச்சனை: உங்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை இருந்தால் கோகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. காரணம், வயிற்றுப்போக்கு எதிர்ப்பு பண்புகள் இதில் உள்ளது. வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நபருக்கு கோகம் பழத்தின் சாறு வரபிரசாதமாகும்.

59

எடை இழப்புக்கு உதவும்: கோகம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இந்த கோகம் பழத்தில்  கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதால், அதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். 

69

இரத்த சர்க்கரை கட்டுக்குள் வைக்கும்:  கோகம் பழத்தின் சாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சாதாரணமாக வைத்திருக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தின் சாற்றை தொடர்ந்து குடியுங்கள்.

79

இதய ஆரோக்கியத்திற்கு: கோகம் பழம் சாப்பிட்டால் இதயம் தொடர்பான நோய்கள் வரும் அபாயமும் பெருமளவு குறையும். உண்மையில், இந்த பழத்தில் வைட்டமின்கள், பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை அனைத்தும் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. 

இதையும் படிங்க:  எச்சரிக்கை: அதிகளவு ஜூஸ் குடிச்சா இவ்வளவு விளைவுகள் ஏற்படுமா..!

89

மாதவிடாய்க்கு உதவுகிறது:  கோகம் அகல் மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்தவும், சிக்கலான மாதவிடாய் நிலைமைகளை எளிதாக்கவும் உதவுகிறது.

இதையும் படிங்க: உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!!

99

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, கோகம் அகல் நல்லதல்ல. அதுமட்டுமின்றி, குறிப்பிடத்தக்க தோல் ஒவ்வாமை உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!

Recommended Stories