கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜொலித்த நடிகைகளில் அமலா பாலும் ஒருவர். இவர் சிந்து சமவெளி என்கிற சர்ச்சைக்குரிய படம் மூலம் அறிமுகமானாலும், அவருக்கு அடையாளமாக அமைந்தது மைனா படம் தான். பிரபுசாலமன் இயக்கிய இப்படம் அமலா பாலுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
25
Amala Paul 2nd love
மைனா படத்துக்கு பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத் திருமகள் படத்தில் நடித்தார் அமலா பால். அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய தலைவா படத்திலும் அமலா பால் தான் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து இரண்டு படங்களில் பணியாற்றியதால் அமலா பாலுக்கும், ஏ.எல்.விஜய்ய்கும் இடையே காதல் மலர்ந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இதையடுத்து இந்த காதல் ஜோடி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து கடந்த 2014-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணத்துக்கு பின்னரும் அமலா பால் சினிமாவில் நடித்து வர, நாளடைவில் விஜய்க்கும், அமலா பாலுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
45
Amala Paul and jagat desai
விவாகரத்துக்கு பின்னர் சினிமாவில் நிர்வாணமாக நடித்து அதிரடி காட்டினார் அமலா பால். மறுபுறம் விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். விஜய்யுடன் விவாகரத்து பெற்று 6 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது அமலா பாலும் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி இருக்கிறார்.
55
Amala Paul photoshoot with jagat desai
அண்மையில் தனது பிறந்தநாளன்று தனது காதலனை அறிமுகப்படுத்திய அமலா பால், தற்போது அவருடன் கண்டமேனிக்கு ரொமான்ஸ் பண்ணியபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அதில் இருவரும் லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.