Ajithkumar Playing cricket : மகனுடன் கிரிக்கெட் விளையாடிய அஜித்குமார்... ஆத்விக் பவுலிங்கில் அவுட் ஆன ஏகே

First Published Jun 19, 2024, 10:04 AM IST

நடிகர் அஜித்குமார் தன்னுடைய மகன் ஆத்விக் உடன் கிரிக்கெட் விளையாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அவர் நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றது. ஒரு மாதம் நடந்த அப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது.

Aadhik ravichandran, Ajith

குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் அஜித் கைவசம் உள்ள மற்றொரு படமான விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தொடங்க உள்ளது. இதற்காக நடிகர் அஜித்குமார் நாளை அஜர்பைஜான் செல்ல உள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... GOAT Movie Story Leaked : டைம் டிராவல் படமா? இணையத்தில் லீக் ஆனது விஜய்யின் கோட் பட ஸ்டோரி..!

Ajith Playing Cricket

இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் தற்போது ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தனது மகன் ஆத்விக் உடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார். சென்னையில் உள்ள டர்ப் கிரவுண்டில் மகன் ஆத்விக் மற்றும் அவரது நண்பர்களுடன் நடிகர் அஜித் கிரிக்கெட் விளையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில் அஜித் பேட்டிங் புடிக்க அவரது மகன் ஆத்விக் பவுலிங் போடுகிறார்.

Ajith Playing Cricket with his son aadvik

அப்போது ஆத்விக் பந்தில் அஜித் அவுட்டாகியும் இருக்கிறார். அஜித் மகன் கால்பந்தில் கலக்கி வந்த நிலையில், தற்போது கிரிக்கெட்டிலும் மாஸாக பந்துவீசியதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். மேலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் என்பதால் சிஎஸ்கே ஜெர்சி அணிந்து அஜித்துடன் கிரிக்கெட் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்... மாஸ் ஹிட் அடித்த மகாராஜா படத்திற்காக மிகவும் கம்மி சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி - அதுவும் இவ்வளவு தானா?

Latest Videos

click me!