அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படம் அக்டோபர் 4-ஆம் தேதி துவங்கிய நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தமுடியாதபடி மீண்டும் ஒரு பிரச்சனை தலை தூக்கி உள்ளதால், அஜித் செம்ம டென்க்ஷனாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தல அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே துவங்க இருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஒரு வழியாக, அக்டோபர் 4-ஆம் தேதி, அஜர்பைஜான் நாட்டில் துவங்கியது.
24
VidaaMuyarchi heroine is Trisha:
இந்த படத்தின் படப்பிடிப்புக்காக த்ரிஷா - அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்றுள்ள நிலையில், சுமார் 3 மாதம் வரை 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அங்கு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தில், தளபதியின் 'லியோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இணைந்து நடித்து வருகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இவர்களை தவிர நடிகை ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு துவங்கி இன்னும் பத்து நாள் கூட ஆகாத நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் படபிடிப்பு முக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகி உள்ள தகவலால், தல அஜித் உட்பட படக்குழுவினர் அனைவருமே கடும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
44
VidaaMuyarchi had a new problem:
அதாவது தற்போது இஸ்ரேல் நாட்டில், போர் நடந்து வருவதால், இந்த போரின் தாக்கம் துபாய், அசர்பைஜான் போன்ற நாடுகளில் காணப்படுகிறதாம். அதனால் அந்நாட்டு அரசாங்கம், விமான போக்குவரத்துக்கு போன்ற விஷயங்களை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தங்களுடைய நாட்டுக்கு வந்திருக்கும் பயணிகளுக்கும் சில எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாம். இதனால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த தகவலால் தான் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் டென்க்ஷனில் உள்ளதாக கூறப்படுகிறது.