நடிகர் அஜித்தின் கெரியரில் மறக்க முடியாத படங்களுள் ஒன்று காதல் மன்னன். கடந்த 1998-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை சரண் இயக்கி இருந்தார். இப்படத்தில் அஜித்துடன் நடிகர் விவேக், பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கரண், ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தின் மூலம் தான் நடிகர் அஜித்துக்கு ரசிகைகள் கூட்டம் அதிகமானது.