இறைவன் படத்தின் படுதோல்வி எதிரொலி... அடுத்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்கிறாரா ஜெயம் ரவி?

Published : Jan 10, 2024, 03:48 PM IST

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தன்னுடைய அடுத்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
இறைவன் படத்தின் படுதோல்வி எதிரொலி... அடுத்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்கிறாரா ஜெயம் ரவி?
Jayam Ravi

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுக்கும் நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். இவருக்கு கடந்த ஆண்டு மிகவும் சோகமான ஒரு ஆண்டாகவே அமைந்தது. ஏனெனில் இவர் சோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்த அகிலன் மற்றும் இறைவன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் படுதோல்வியை சந்தித்தன. இதனால் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் பயங்கரமாக அடிவாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

24
Siren movie

அடுத்தடுத்து இரண்டு படங்கள் தோல்வி அடைந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் உடன் சைரன், கமல்ஹாசனின் தக் லைஃப், கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கும் காதலிக்க நேரமில்லை, எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீனி, மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 என கைவசம் அரை டஜன் படங்களுடன் செம்ம பிசியான நடிகராக வலம் வருகிறார் ஜெயம் ரவி.

இதையும் படியுங்கள்... காத்திருந்த எச்.வினோத்... கைவிட்ட கமல்ஹாசன்! மருதநாயகம் போல் டிராப் ஆன KH233 - காரணம் என்ன?

34
Siren movie release date

இதில் ஆண்டனி பாக்கியராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதமே வெளியாக இருந்தது. கிறிஸ்துமஸ் சமயத்தில் சலார் என்கிற பான் இந்தியா திரைப்படம் ரிலீஸ் ஆனதால் சைரன் படம் ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த நிலையில் சைரன் பட ரிலீஸ் பற்றி ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது.

44
siren movie Direct OTT release?

அதன்படி சைரன் திரைப்படம் நேரடியாக ஓடிடி ரிலீசுக்கு தயாராகி வருவதாக தகவல் பரவி வருகிறது. அதன்படி இப்படம் வருகிற ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் படக்குழு இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கு முன்னர் நடிகர் ஜெயம் ரவியின் 25-வது படமான பூமி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விஜய் கூட செய்யாத உதவியை... விஜயகாந்த் மகனுக்காக செய்ய முன்வந்த ராகவா லாரன்ஸ் - குவியும் பாராட்டு

Read more Photos on
click me!

Recommended Stories