ஆதிக் ரவிச்சந்திரனா? சோபிசந்தா? அஜித்தின் ஏகே 63 பட வாய்ப்பை தட்டிதூக்கியது யார்? சுடசுட வந்த சூப்பர் அப்டேட்

Published : Nov 29, 2023, 02:53 PM IST

அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள ஏகே 63 படத்தை இயக்கும் போட்டியில் ஆதிக் மற்றும் கோபிசந்த் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், அது யார் என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
ஆதிக் ரவிச்சந்திரனா? சோபிசந்தா? அஜித்தின் ஏகே 63 பட வாய்ப்பை தட்டிதூக்கியது யார்? சுடசுட வந்த சூப்பர் அப்டேட்
Ajithkumar

நடிகர் அஜித் குமார் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் தயாராகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்றது.

24
Adhik ravichandran

இதையடுத்து சில நாட்கள் பிரேக் விடப்பட்டதை அடுத்து படக்குழுவினர் சென்னை திரும்பிவிட்டனர். நடிகர் அஜித் சென்னை திரும்பியதும் அவர் நடிக்கும் அடுத்த படமான ஏகே 63 குறித்த அப்டேட்டும் கசிந்துள்ளது. அதன்படி இப்படத்தை முதலில் அஜித்தின் தீவிர ரசிகனும் அவருடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவருமான ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இவர் கடைசியாக விஷாலின் மார்க் ஆண்டனி படத்தை இயக்கி இருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Gopichand

இதனிடையே கடந்த சில தினங்களாக அஜித்தின் ஏகே 63 படத்தை இயக்கப்போவது பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி தான் என ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வந்தது. இதில் எது உண்மை என ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில், கோபிசந்த் இயக்க உள்ளதாக பரவிய தகவல் உண்மையில்லை என்று டோலிவுட் வாட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இதன்மூலம் ஏகே 63 படத்தை அவர் இயக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

44
AK 63 Director

மறுபுறம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது கன்பார்ம் ஆகி இருக்கிறது. இப்படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளதாம். அந்நிறுவனம் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தை தயாரித்து வருகிறது. மைத்ரி நிறுவனம் தயாரிப்பதால் ஏகே 63 திரைப்படம் தெலுங்கு மாநிலங்களிலும் மிகப்பரிய அளவில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... கார்த்திக் ஆபிஸுக்கு திடீரென வந்த அபிராமியால் தீபாவுக்கு ஏற்பட்ட சிக்கல் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

click me!

Recommended Stories