Serial Actress Rachitha
கர்நாடகாவில் பிறந்த நடிகை ரஷிதா மகாலட்சுமி கடந்த 2007ம் ஆண்டு கன்னட மொழியில் ஒளிபரப்பாக தொடங்கிய ஒரு சீரியலின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக 2010ம் ஆண்டு வரை அவர் கன்னட மொழி நாடகங்களில் நடித்து வந்தார்.
அதிரடியாக 2 தேசிய விருதை தட்டி தூக்கிய KGF!
Serial Actress Rachitha Mahalakshmi
அதன் பிறகு தமிழில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய "பிரிவோம் சந்திப்போம்" என்கின்ற நாடகத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் தொடர்ச்சியாக "இளவரசி" மற்றும் "சரவணன் மீனாட்சி" உள்ளிட்ட நாடகங்களில் நடித்து மிகப் பெரிய அளவில் புகழ் பெற்றார்.
Actress Rachitha
கடந்த 2015ம் ஆண்டு முதல் கோலிவுட் உலகில் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ள ரஷிதா நடிப்பில், தொடர்ச்சியாக பல தமிழ் திரைப்படங்கள் உருவாகி விரைவில் வெளி வருவதற்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Vijayalakshmi
காதல் கோட்டை, நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற நல்ல பல திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் தான் அகத்தியன். அவருடைய இரண்டாவது மகள் தான் விஜயலட்சுமி. அவரும் தற்பொழுது திரைத்துறையில் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Actress Vijayalakshmi
கடந்த 2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான "சென்னை 28" திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான விஜயலட்சுமிக்கு, அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.