2002-ம் ஆண்டு வெளியான பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சுஜா வருணி. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் சுஜா வருணி நடித்து வந்தார்.
26
Suja Varunee
இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலும் விருந்தினராக பங்கேற்றார். அதே போல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் சுஜா கலந்து கொண்டார்.
36
Suja Varunee Family
இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமாரை அவர் திருமணம் செய்து கொண்டார். சுஜாவும் சிவகுமாரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
46
Suja Varunee Latest
சிவக்குமாரும் ஒரு சில படங்களில் நடித்த நிலையில் அவரின் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. சுஜா – சிவக்குமார் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனது கணவருடன் சேர்ந்து பிபி ஜோடி நிகழ்ச்சியிலும் சுஜா பங்கேற்றிருந்தார்.
56
Suja Varunee with husband
தனியாக யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கி உள்ள சுஜா அதில் தனது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
66
Suja Varunee Latest Pics
அந்த வகையில் தற்போது சுஜா வருணி தனது கணவர், குழந்தை உடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.