என் மொத்த லவ்வும் உங்களுக்கு தான்.. ஹார்டை பறக்கவிட்டு ரசிகர்களை மயக்கிய கீர்த்தி சுரேஷ் - கூல் பிக்ஸ்!

First Published | Aug 13, 2024, 11:58 PM IST

Keerthy Suresh : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அவர் தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

Raghu Thatha

மிகப்பெரிய நடிப்பு குடும்பத்தில் பிறந்த கீர்த்தி சுரேஷ், வெளிநாடுகளுக்கு சென்று தனது பட்டப் படிப்பை முடித்து திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தனது தாயைப் போலவே மலையாள மொழி திரைப்படங்களில் இவர் நடிக்க தொடங்கினார். தனது 21வது வயதில் மலையாள மொழியில் வெளியான கீதாஞ்சலி என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் நாயகியாக கலை உலகில் அறிமுகமானார்.

பட வாய்ப்பு கிடைக்காததால்... சீரியலுக்கு வந்த நடிகை அபிராமி வெங்கடாச்சலம்! எந்த தொடரில் நடிக்கிறார் தெரியுமா?

Actress Keerthy Suresh

அதன் பிறகு தமிழ் மொழியில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான விக்ரம் பிரபுவின் "இது என்ன மாயம்" என்கின்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து கோலிவுட் உலகில் களமிறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நல்ல பல படங்களில் நடிக்க துவங்கினார்.

Tap to resize

Actress Keerthy Suresh Movies

கடந்த 2018ம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் ஒரே நேரத்தில் வெளியான மகாநதி என்கின்ற திரைப்படத்தில், மறைந்த நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் பல உயரிய விருதுகளை தொடர்ச்சியாக வென்று அசத்தி வருகின்றார்.

Raghu Thatha Movie

தொடர்ச்சியாக ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா என்கின்ற திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தங்கலான் திரைப்படத்தோடு போட்டி போட உள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

மதுரை தோசை.. மல்லிப்பூ சூப்பரோ சூப்பர்.. அப்படியே மீனாட்சி அம்மனையும் தரிசிச்சுட்டேன் - நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி

Latest Videos

click me!