சமீபத்தில் அனிதாவின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விழாவில் விஜயகுமார், அருண் விஜய், கவிதா, ப்ரீத்தா, ஸ்ரீ தேவி என ஒட்டுமொத்த குடும்பமுமே கலந்து கொண்டனர். அதே போல் சமீபத்தில் நடந்த வரலட்சுமி பூஜையில் கவிதா, அனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்களும் வெளியானது.