பெரிய மனுஷன் சார் நீ.. குஷி பட சம்பளத்தில் 100 குடும்பங்களுக்கு உதவி - பெரும் தொகையை கொடுத்த விஜய் தேவரகொண்டா!

Ansgar R |  
Published : Sep 05, 2023, 05:15 PM ISTUpdated : Sep 05, 2023, 05:20 PM IST

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா ஆகிய இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்திருந்த படம் தான் குஷி. இந்த திரைப்படத்தை இயக்குனர் சிவா நிர்வாண இயக்க, மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

PREV
14
பெரிய மனுஷன் சார் நீ.. குஷி பட சம்பளத்தில் 100 குடும்பங்களுக்கு உதவி - பெரும் தொகையை கொடுத்த விஜய் தேவரகொண்டா!
Kushi movie

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'குஷி' படத்தின் வெற்றியில் மூழ்கியுள்ளனர் அவர்கள் இருவரும். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்குகளை பார்வையிட்ட பிறகு, விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டு பேசினார்.

விஜய் சேதுபதி விலகிய முரளிதரன் பயோபிக்... அனல்பறக்கும் வசனங்களுடன் கூடிய ‘800’ பட டிரைலரை வெளியிட்ட சச்சின்

24
Samantha Ruth Prabhu

அப்போது, தான் 'குஷி' படத்திற்காக பெற்ற சம்பளத்தில் இருந்து, 100 குடும்பங்களுக்கு நன்கொடையாக, தலா 1 லட்சம் வீதம் ரூ.1 கோடி வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

34
Samantha and Vijay

நேற்று செப்டம்பர் 4 ஆம் தேதி, விசாகப்பட்டினத்தில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா தனது ரசிகர்கள் மத்தியில் பேசினார் அதுமட்டுமல்லாமல் தனது மகிழ்ச்சியை பரப்பும் வகையில் 100 குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். அவர் கூறியது பின்வருமாறு.. "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் ஒன்றை செய்ய யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

44
Actor Vijay Devarakonda

ஆனால் அது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் அதைச் செய்யாவிட்டால், எனக்கு உறக்கம் வராது. ஆகவே உங்களிடையே மகிழ்ச்சியை பரப்ப, எனது 'குஷி' பட சம்பளத்தில் இருந்து 100 குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாயை வழங்குகிறேன். உதவி தேவைப்படும் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அடுத்த 10 நாட்களில் தலா ரூ. 1 லட்சம் காசோலையாக வழங்குவேன். எனது வெற்றி மற்றும் மகிழ்ச்சியோடு சேர்ந்து எனது சம்பளத்தையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்" என்றார் அவர்.

பிரமாண்டமாக நடந்த நாஞ்சில் விஜயன் ரிசெப்ஷன்! வாழ்த்து கூற கூடிய விஜய் டிவி பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories