நம்ம SK பொண்ணா இவ்ளோ வளந்துட்டாங்க..? அழகிய குடும்பத்தோடு.. ஹாப்பி தீபாவளி சொன்ன சிவா - வைரல் போட்டோஸ்!
Ansgar R |
Published : Nov 12, 2023, 03:44 PM IST
Sivakarthikeyan Deepavali Wish : சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோர்களில் பங்கேற்று வெற்றி பெற்று, அதன் பிறகு தொகுப்பாளராக தன்னை உயர்த்திக்கொண்டு, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக விளங்கி வருகிறார் சிவகார்த்திகேயன் என்றால் அது மிகையல்ல.
கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான "மெரீனா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக களமிறங்கியவர் தான் சிவகார்த்திகேயன். அதே ஆண்டு இயக்குனர் எழில் இயக்கத்தில் வெளியான "மனம் கொத்தி பறவை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக உருவெடுத்தார் அவர்.
அதை தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரோமியோ, வேலைக்காரன் கனா மற்றும் மிஸ்டர். லோக்கல் என்று அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் தமிழ் திரை உலகின் முன்னணி நாயகனாக அவர் மாறினார். அண்மையில் வெளியான அவருடைய மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
33
Aarthi Doss
தற்பொழுது அயலான் என்கின்ற திரைப்பட பணிகளை முடித்துள்ள சிவகார்த்திகேயன், மேலும் இரண்டு திரைப்படங்களில் தற்பொழுது நடித்த வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது மகள், மகன் மற்றும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, தீபாவளி வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கும், ஆர்த்தி என்பவருக்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.