இது WearOS இல் இயங்கும் சமீபத்திய ப்ரீமியம் ஸ்மார்ட்வாட்ச்களில் ஒன்று. ரூ.20,000க்கு கீழ் கிடைக்கும் OnePlus வாட்ச் 2R பிற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் நன்றாக வேலை செய்கிறது. ஐந்து நாட்கள் பேட்டரி லைஃப் கிடைக்கும். பிரீமியம் அலுமினிய கட்டமைப்பு, எளிதாக மாற்றக்கூடிய ஸ்ட்ராப் என ப்ரீமியம் ஸ்மார்ட்வாட்ச்களில் இருக்கவேண்டிய அனைத்தையும் கொண்டுள்ளது.