குடிக்குற தண்ணீர் இவ்ளோ சுத்தமா இருக்கணுமா... இந்த RO வாட்டர் பியூரிஃபையர் வாங்கிருங்க!

Published : Jul 29, 2024, 12:39 AM ISTUpdated : Jul 29, 2024, 12:41 AM IST

சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமானது. அதற்கு வீட்டில் RO தொழில்நுட்பத்தில் இயங்கும் வாட்டர் பியூரிஃபையர் இருப்பது அவசியம்.

PREV
16
குடிக்குற தண்ணீர் இவ்ளோ சுத்தமா இருக்கணுமா... இந்த RO வாட்டர் பியூரிஃபையர் வாங்கிருங்க!
Best RO Water Purifiers

பல நோய்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காததால் தான் ஏற்படுகின்றன. சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமானது. அதற்கு, உங்கள் வீட்டில் ஒரு RO (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்) தொழில்நுட்பத்தில் இயங்கும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் (வாட்டர் பியூரிஃபையர்) இருப்பது அவசியம்.

26
Livpure HUL Pureit, Aquaguard, Water Purifier, V-Guard, RO, KENT, RO Water, Reverse Osmosis,

Livpure GLO PRO++ வாட்டர் ப்யூரிஃபையர் மேம்பட்ட RO, UV மற்றும் UF சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குகிறது. இந்த சுத்திகரிப்பு ஆறு-நிலை வடிகட்டுதல் செயல்முறையைக் கொண்டுள்ளது. பாக்டீரியா மற்றும் வைரஸ்களை நீக்குகிறது, சுத்தமான மற்றும் ஆரோக்கியமான தண்ணீரை உறுதி செய்கிறது. 7 லிட்டர் சேமிப்பு திறன் கொண்ட இது நடுத்தர முதல் பெரிய குடும்பங்களுக்கு ஏற்றது.

36
HUL Pureit

HUL Pureit Eco Water Saver Mineral RO+UV+MF வாட்டர் ப்யூரிஃபையர் பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது RO, UV மற்றும் MF உள்ளிட்ட ஏழு-நிலை சுத்திகரிப்பு செயல்முறையைக் கொண்டுள்ளது. இது அனைத்து தீங்கு விளைவிக்கும் அசுத்தங்களையும் அகற்றுவதை உறுதி செய்கிறது. சுவரில் பொருத்தக்கூடியது. 10 லிட்டர் வரை கொள்ளளவு உடையது. Eco Recovery தொழில்நுட்பம் தண்ணீர் வீணாவதைக் குறைக்கிறது.

46
Aquaguard

Aquaguard Sure Delight NXT வாட்டர் ப்யூரிஃபையர் 6-நிலை சுத்திகரிப்பு செயல்முறையுடன் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்கிறது. RO, UV மற்றும் UF தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. அசுத்தங்களை திறம்பட நீக்கி சுத்தமான தண்ணீரை கொடுக்கிறது. பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. 7 லிட்டர் அளவுள்ள தொட்டி இருக்கிறது.

56
V-Guard

V-Guard Zenora RO UF வாட்டர் பியூரிஃபையர் அதன் மேம்பட்ட RO மற்றும் UF தொழில்நுட்பங்களுடன் நம்பகமான மற்றும் பயனுள்ள சுத்திகரிப்பை வழங்குகிறது. பல-நிலை வடிகட்டுதல் செயல்முறையைக் கொண்டுள்ளது. பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அகற்றுகிறது. 7 லிட்டர் சேமிப்பு திறன் கொண்ட இது நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்றது.

 

66
KENT

KENT Supreme Copper RO வாட்டர் பியூரிஃபையர் மேம்பட்ட RO சுத்திகரிப்புடன் தாமிரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான குடிநீரை உறுதி செய்கிறது. பல-நிலை வடிகட்டுதல் செயல்முறையைக் கொண்ட இது, அசுத்தங்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களையும் நீக்குகிறது. 9 லிட்டர் கொள்ளளவு உடையது. செம்பு பயன்படுத்தப்பட்டிருப்பது நீரின் சுவையை அதிகரித்து, நுண்ணுயிர்களை எதிர்க்கும் திறனையும் மேம்படுத்துகிறது.

click me!

Recommended Stories