கேலக்ஸி ரிங்கை அடிச்சுத் தூக்கும் போட் ஸ்மார்ட் ரிங்! டக்கரான டிசைனில் விரைவில் ரிலீஸ்

First Published Jul 17, 2024, 4:41 PM IST

போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் இந்தியாவில் ஜூலை 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் போட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக நாளை (ஜூலை 18) முதல் முன்பதிவு செய்யலாம். அறிமுகச் சலுகை விலையாக ரூ.2,999 க்கு இந்த ஸ்மார்ட் ரிங்கை வாங்கலாம்.

Boat Smart Ring Active

போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் விரைவில் இந்தியாவில் கிடைக்க உள்ளது. இந்த ஸ்மார்ட் மோதிரத்தின் வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்களையும் போட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த் புதிய ஸ்மார்ட் ரிங் சாம்சங் அண்மையில் அறிமுகப்படுத்திய கேலக்ஸி ரிங் மோதிரத்துக்குப் சரியான போட்டியாக இருக்கும் என்று கேஜெட் பிரியர்கள் கருதுகிறார்கள்.

Boat Smart Ring Active

போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் அறிமுகச் சலுகை விலையில் கிடைக்கும் என்று போட் கூறுகிறது. ஆகஸ்ட் 2023 இல் வெளியிடப்பட்ட போட் ஸ்மார்ட் ரிங்கை விட மலிவான விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. தற்போதுள்ள போட் ஸ்மார்ட் ரிங் ரூ. 8,999 விலையில் மூன்று அளவுகளில் (17.40mm, 19.15mm மற்றும் 20.85mm) கிடைக்கிறது.

Latest Videos


Boat Smart Ring Active

போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் இந்தியாவில் ஜூலை 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் போட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக நாளை (ஜூலை 18) முதல் முன்பதிவு செய்யலாம். அறிமுகச் சலுகை விலையாக ரூ.2,999 க்கு இந்த ஸ்மார்ட் ரிங்கை வாங்கலாம்.

Boat Smart Ring Active

புதிய போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் மூன்று நிறங்களிலும் ஐந்து அளவுகளிலும் கிடைக்கும் என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ரிங்குடன் ஒரு போர்ட்டபிள் மெக்னெட்டிக் சார்ஜிங் கேஸும் வழங்கப்படும்.

Boat Smart Ring Active

போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் துருப்பிடிக்காத எஃகை பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது. பல சென்சார்கள் மூலம் இதயத் துடிப்பு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு (SpO2), தூக்கம் மற்றும் மன அழுத்த அளவைக் கண்காணிக்கும் திறன் கொண்ட இந்த ஸ்மார்ட் ரிங் ஆட்டோ ஹெல்த் மானிட்டரிங் அம்சம் கொண்டதாக இருக்கும்.

Boat Smart Ring Active

தற்போதுள்ள போட் ஸ்மார்ட் ரிங் மாடல் ஷார்ட் வீடியோ மற்றும் மியூசிக் பிளேபேக் நேவிகேஷன் மற்றும் கேமரா கன்ட்ரோல் வசதிகளைக் கொண்டதாக இருக்கிறது. தற்போதைய ஸ்மார்ட் ரிங் ஏழு நாட்கள் பேட்டரி லைஃப் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

Boat Smart Ring Active

5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங் மற்றும் SOS அழைப்பு ஆகியவையும் தற்போதைய ஸ்மார்ட் ரிங் மாடலில் உள்ளன. வரவிருக்கும் புதிய ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் இதே போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

click me!