வெறும் 2000 க்குள் சூப்பரான ஆடியோ அனுபவம்! மியூசிக், கேமிங் ரசிகர்களுக்கு டாப் 5 ஹெட்போன்கள்!!

First Published | Jul 24, 2024, 6:09 PM IST

இசை மற்றும் கேமிங் ரசிகர்களுக்கு ஹெட்போன்கள் மிகவும் தேவையானவை. அவர்களுக்கு குறைந்த விலை கிடைக்கும் பல ஆப்ஷன்கள் இருக்கின்றன.

boAt Rockerz 450 Bluetooth On-Ear Headphones

boAt Rockerz 450 புளூடூத் ஆன்-இயர் ஹெட்ஃபோன் லூசியஸ் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்குகிறது. 40மிமீ டைனமிக் டிரைவர்கள், அதிவேகமான ஆடியோவைப் பெறுவதை உறுதிசெய்கிறது. புளூடூத் வயர்லெஸ் கனெக்டிவிட்டி இருக்கிறது. வயர்டு இணைப்பை விரும்பினால் AUX ஆப்ஷனும் இருக்கிறது. 1 வருட உத்தரவாதமும் கொடுக்கிறார்கள். அமேசானில் இதன் விலை ரூ.1,998.

Noise Two Wireless On-Ear Headphones

Noise Two வயர்லெஸ் ஆன்-இயர் ஹெட்ஃபோன்கள் 50 மணிநேரம் வரை நீடிக்கும் பிளேபேக்கை வழங்குகின்றன. கேமிங்கிற்கும் ஸ்ட்ரீமிங்கிற்கும் சிறந்த ஆடியோவை அளிக்கும். புளூடூத், AUX, SD கார்டு மற்றும் FM ஆகிய நான்கு ப்ளே மோடுகளுடன் இசையை ரசிக்கலாம். IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் அம்சமும் உள்ளது. மொத்தத்தில், இது கேமிங்கிற்கான சிறந்த பட்ஜெட் வயர்லெஸ் ஹெட்ஃபோன்களில் ஒன்று. அமேசானில் இதன் விலை ரூ.1,697.

Tap to resize

Sony MDR-ZX310AB Black Over-Ear Headphones

Sony MDR-ZX310AB பிளாக் ஓவர்-இயர் ஹெட்ஃபோன்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த ஆடியோ அனுபவத்தைக் கொடுக்கிறது. இந்த ஹெட்ஃபோன்கள் 10-24,000 ஹெர்ட்ஸ் சக்திவாய்ந்த மற்றும் சமநிலையான ஒலியை வழங்கும். பேட் செய்யப்பட்ட இயர்பேடுகள் காதுகளில் அழுத்தத்தைக் குறைக்கும். இதனால் நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். ஸ்மார்ட்போன் பிளேபேக் கட்டுப்பாடு மற்றும் ஸ்விவல் இயர்கப் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. 1.2-மீட்டர் Y-வகை கேபிள் இணைப்பு கொண்டது. வழக்கமாக சோனி ஹெட்ஃபோன்களில் இருக்கும் தரமான ஒலி இதிலும் கிடைக்கும். அமேசானில் இதன் விலை ரூ.1,899.

ZEBRONICS DUKE Wireless Headphone

ZEBronICS DUKE வயர்லெஸ் ஹெட்ஃபோன் நீண்ட நேர கேமிங்கிற்கு ஏற்றது. 60 மணிநேரம் வரை பிளேபேக் நேரம் கொண்ட இந்த ஹெட்போன்  சிறந்த பாஸ் மற்றும் அதிவேக ஒலியை வழங்குகிறது. சுற்றுச்சூழலில் உள்ள இரைச்சலை ரத்து செய்யும் ENC அம்சம் இருக்கிறது. ஸ்டைலிஷ் LED லைட்டும் இருக்கிறது. ப்ளூடூத் மற்றும் AUX இணைப்புகள் மூலம் இந்த ஹெட்போனை பயன்படுத்தலாம். அமேசானில் இதன் விலை ரூ.1,197.

HP 500 Bluetooth Wireless Over-Ear Headphones

ஹெச்பி 500 புளூடூத் வயர்லெஸ் ஓவர்-இயர் ஹெட்ஃபோன்கள் தரமான ஒலியுடன் அணிந்துகொள்ளவும் வசதியானது. புளூடூத் 5.0 உடன், இந்த ஹெட்ஃபோன்கள் 2x வேகத்தையும் 4x இணைப்பையும் வழங்குகின்றன. 20 மணிநேர பேட்டரி லைஃப் கொண்ட இதனை USB-C சார்ஜிங் மூலம் விரைவாக சார்ஜ் செய்யலாம். இரச்சலை அகற்றும் அம்சம் தெளிவான ஆடியோவை ரசிக்க உதவுகிறது. நீடித்து நிலைத்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெட்ஃபோன்கள் 1 வருட உத்தரவாதத்துடன் வருகிறது. அமேசானில் இதன் விலை ரூ.1,899.

Latest Videos

click me!