மின் கட்டணத்திற்காக வழக்கத்தை விட அதிகமாக செலவாகிறதா? மின்கட்டணத்தைக் கட்டுக்குள் வைத்து செலவைக் குறைக்க சிக்கனத்தைக் கடைபிடிப்பது அவசியம். அதற்கு உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு சாதனமும் எவ்வளவு மின்சக்தியைப் பயன்படுத்துகின்றன என்பதைப் தெரிந்துகொள்வது உதவியாக இருக்கும். இதற்காக நவீனமான கேஜெட்கள் சில குறைந்த விலையில் கிடைக்கின்றன.
Smart plugs
இ-காமர்ஸ் இணையதளங்களில் பல WiFi ஸ்மார்ட் பிளக்குகள் கிடைக்கும். மின் பயன்பாட்டைக் கண்காணிக்கும் அம்சங்கள் கொண்டவையும் உள்ளன. ஹீரோ குழுமத்தின் Qubo, TP-Link, Wipro, Havells, Philips போன்ற பல பிராண்டுகளின் தயாரிப்புகள் மிகவும் குறைவான விலையில் கிடைக்கின்றன. ரூ. 699 முதல் 10A ஸ்மார்ட் பிளக்கை வாங்கலாம். 16A பிளக்கை ரூ.899 க்கு வாங்கலாம்.
Smart plugs
சாக்கெட்டில் ஸ்மார்ட் பிளக்கைப் பொறுத்தி உங்கள் ஸ்மார்ட்போனில் க்யூபோ செயலி மூலம் Pairing செய்ய வேண்டும். மின் பயன்பாடு குறித்த விவரங்களை மொபைலிலேயே பார்த்துக்கொள்ளலாம். இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், இது இன்டர்நெட் மூலம் வேலை செய்கிறது. எனவே வெளியில் இருக்கும்போது கூட வீட்டில் உள்ள சாதனங்களைக் கட்டுப்படுத்தலாம். வீட்டிற்கு வருவதற்கு முன் வீட்டில் ஏசியை ஆன் செய்து தயாராக வைக்கலாம். தினமும் காலை 7 மணிக்கு 20 நிமிடங்களுக்கு குளியலறை கீசர் ஆன் செய்யப்படும் வகையில் அமைக்கலாம். வெளியே இருக்கும்போது வீட்டில் உள்ள பிரிட்ஜை அணைத்து வைக்கலாம்.
Smart plugs
பல மின்சாதனங்களை இணைக்க விரும்பினால், ரூ.1890 விலையில் கிடைக்கும் விப்ரோவின் ஸ்மார்ட் பிளக்கை வாங்கலாம். 4 சாக்கெட்டுகள் கொண்ட இந்த ஸ்மார்ட் பிளக் ஆற்றல் கண்காணிப்பு, ஆட்டோ கட்-ஆஃப், திட்டமிடல் ஆகிய அம்சங்களைக் கொண்டது. அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் மூலம் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் திறனும் இதில் உள்ளது.
Smart plugs
மின் நுகர்வை நேரடியாக கண்காணிக்க உதவும் கருவிகளும் உள்ளன. மின்விநியோக பெட்டியில் நிறுவக்கூடிய கேஜெட்களும் உள்ளன. ஐஐடி பாம்பே மற்றும் சஸ்ட் லேப்ஸ் இணைந்து ஓம் அசிஸ்டெண்ட் என்ற கேஜெட்டை உருவாக்கியுள்ளனர். ஓம் அசிஸ்டெண்ட் என்பது வீடுகளுக்கான லைவ் ஆற்றல் கண்காணிப்பு கருவி ஆகும். ஆனால், இதை எலக்ட்ரீஷியன் மூலம் தான் நிறுவ வேண்டும். இந்த சாதனம் ஓம் பாட் என்று அழைக்கப்படுகிறது. இதை வீட்டில் உள்ள மின்விநியோகப் பெட்டில் நிறுவுவதற்கு சுமார் 30 நிமிடங்கள் ஆகும். நிறுவியதும் மின்நுகர்வு விவரங்களை ஸ்மார்ட்போனில் வைஃபை பார்த்துக்கொள்ளலாம். இதற்கான ஓம் அசிஸ்டெண்ட் ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் பயன்படுத்தலாம்.
Smart plugs
இது தவிர மின்சாதனங்கள் பல பயன்பாட்டில் இல்லாதபோது மின்சக்தியைப் பயன்படுத்தாது என்று பலரும் கருதுகிறார்கள். டிவி, மானிட்டர், யுபிஎஸ் போன்ற சாதனங்கள் பயன்பாட்டில் இல்லாத நிலையில் குறைந்த அளவு மின்சக்தியைப் பயன்படுத்துகின்றன. இந்நிலையில் தொடர்ந்து இருந்தால் சிறுகச்சிறுக மின்சக்தி வீணாகிவிடும். எனவே முடிந்தவரை மின்சாதனங்களை பவர் சேவர் முறையில் பயன்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.