அமேசானில் அதிரி புதிரி ஆஃபர்! ஜுஜூபி விலையில் கிடைக்கும் டாப் ஸ்மார்ட்வாட்ச்கள்!

First Published | Sep 16, 2024, 9:01 AM IST

Fastrack, Noise, Boat முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட் வாட்ச்கள் தற்போது அமேசான் தளத்தில் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கின்றன. வங்கி கேஷ்பேக் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷன்களும் உள்ளன.

Smartwatch sale in Amazon 2024

மினி ஸ்மார்ட்போன்களாக மாறியுள்ள ஸ்மார்ட்வாட்ச்கள் நேரம் பார்க்க மட்டும் பயன்படுவதில்லை. ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் பல வழிகளில் உதவுகின்றன. பிரபல பிராண்டுகளின் ஸ்மார்ட் வாட்ச்கள் தற்போது அமேசான் தளத்தில் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கின்றன.

Smart Watch with Bluetooth Calling

லேட்டஸ்ட் அம்சங்களுடன் ஸ்டைலிஷ் தோற்றம் கொண்ட Fastrack, Noise, Boat முன்னணி பிராண்டகளில் ஸ்மார்ட் வாட்ச்களை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கேஷ்பேக் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷன்களும் உள்ளன.

Tap to resize

Fire-Boltt Phoenix

ஃபயர் போல்ட் ஃபோனிக்ஸ் (Fire-Boltt Phoenix) 240x240 பிக்சல் ரெசல்யூஷன், 260 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.3 இன்ச் TFT கலர் ஃபுல்-டச் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் நீடித்து நிற்கும் பேட்டரி ஆயுள் கொண்டது. புளூடூத் காலிங் செய்யாதபோது 7 நாட்கள், புளூடூத் காலிங் பயன்படுத்தினால் 4 நாட்கள் சார்ஜ் நிற்கும். ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன், பில்ட்-இன் மைக், ஸ்பீக்கர் ஆகியவை கூடுதல் அம்சங்கள். ஃபயர் போல்ட் ஸ்மார்ட் வாட்ச் அமேசானில் ரூ.1,599 க்குக் கிடைக்கிறது.

CrossBeats Armour

கிராஸ்பீட்ஸ் ஆர்மர் (CrossBeats Armour) 1.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் ப்ரூஃப் தொழில்நுட்பம், 410mAh பேட்டரி திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 15 நாட்கள் வேலை செய்யும் என்பது இதன் சிறப்பம்சம். புளூடூத் இணைப்பும் உள்ள க்ராஸ்பீட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் ரூ.3,999க்கு 67 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.

Fast Track Dzire FX One

AI வாய்ஸ் அசிஸ்டன்ட், பில்ட்-இன் கேம்கள், IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் சிறப்பு அம்சங்கள் கொண்ட Fast Track Dzire FX One 1.38 இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்டது. BT காலிங், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கண்காணிப்பு வசதிகளும் உள்ளன. Fast Track Dzire FX One வாட்ச் அமேசானில் ரூ.2,499க்கு கிடைக்கிறது.

Boat Lunar Orb

Boat Lunar Orb வாட்ச் 1.45 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, BT காலிங், பிரீமியம் ஸ்பீக்கர், மைக்ரோஃபோன் மற்றும் பிற அம்சங்களைக் கொண்டுள்ளது. ஹெல்த் ஃபிட்னஸ் டிராக்கர், கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளின் லைவ் ஸ்கோர் அப்டேட் போன்ற விவரங்களும் பார்க்கலாம். அமேசான் 79 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இந்தக் கடிகாரத்தை வெறும் ரூ.1,899க்கு வாங்கலாம்.

Color Fit Pulse 3

Noise நிறுவனம் வெளியிட்ட Color Fit Pulse 3 Smart Watchக்கு 79 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. 1.96 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஏழு நாட்கள் நீடிக்கும் பேட்டரி, ஃபிட்னஸ் டிராக்கிங் போன்றவை இதன் முக்கிய அம்சங்கள். TrueSyncTM மூலம் மேம்பட்ட புளூடூத் இணைப்பும் உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் அமேசானில் ரூ.1,499க்கு கிடைக்கிறது.

Latest Videos

click me!