Vozinha : தனி ஒருவனாக ஸ்பெயினுக்கு தண்ணிகாட்டிய கேப் வெர்டே கோல்கீப்பர்... யார் இந்த வொசின்ஹா?

Published : Jun 16, 2026, 03:51 PM IST

Cape Verde vs Spain : ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணியின் அத்தனை தாக்குதல்களையும் தன் இரு கைகளால் தடுத்து, 40 வயதில் ஒரு கால்பந்து வீரர் சரித்திரத்தில் தன் பெயரை எழுதியுள்ளார்.

PREV
14
Cape Verde goalkeeper Vozinha

இன்ஸ்டாகிராமில் வெறும் 50 ஆயிரம் ஃபாலோயர்களுடன் இருந்த ஒரு சாதாரண கோல்கீப்பர். ஆனால், ஒரே ஒரு மேட்ச் மூலம் அவருடைய ஃபாலோயர்கள் எண்ணிக்கை 60 லட்சமாக உயர்ந்தது. இன்று கூகுளில் 'V' என்று டைப் செய்தால், உலகம் முழுவதும் அதிகம் தேடப்படும் பெயராக வொசின்ஹாவின் பெயர் தான் முதலில் வருகிறது.

ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினின் அத்தனை தாக்குதல்களையும் தன் இரு கைகளால் தடுத்து நிறுத்தி, 40 வயதில் ஒரு மனிதர் சரித்திரம் படைத்திருக்கிறார். யார் அவர்? கால்பந்து உலகின் மாபெரும் சக்தியான ஸ்பெயினுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நின்றவர். கோலை நோக்கி வந்த பந்துகளை எல்லாம் தன் நெஞ்சோடு அணைத்து திருப்பியனுப்பியவர். ஒரு சின்ன நாட்டின் பெரிய கனவுகளுக்குக் காவலாக இருந்தவர்.

கால்பந்து உலகில் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்த அவர், இன்று உலக கால்பந்தின் புதிய ஹீரோவாக மாறியுள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக், ஸ்பானிஷ் லா லிகா போன்ற பெரிய லீக்குகளில் விளையாடும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் வாங்கும் வீரர்களை எல்லாம் திணறடித்த இந்த வீரர் யார் என்றுதான் விளையாட்டு உலகம் தேடிக்கொண்டிருக்கிறது. அவருடைய பெயர்: வொசின்ஹா.

24
சரித்திரம் படைத்த போராளி

போர்ச்சுகல் நாட்டின் இரண்டாம் டிவிஷன் கிளப்பான 'ஷாவேஸ்' அணிக்காக விளையாடும் 40 வயதான வொசின்ஹாவின் கால்பந்து வாழ்க்கை அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. 25 வயது வரை அவர் ஒரு புரொஃபஷனல் கால்பந்து வீரராகக் கூட இல்லை. அப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இருந்து வந்துதான், உலகக் கோப்பை போன்ற பெரிய மேடையில் ஸ்பெயின் போன்ற ஒரு மாபெரும் அணிக்கு எதிராக சரித்திரச் சுவர் எழுப்பியுள்ளார்.

34
தகர்க்க முடியாத சாதனை

2018-க்குப் பிறகு, ஒரு உலகக் கோப்பை போட்டியில் பாக்ஸிற்குள் இருந்து அடிக்கப்பட்ட இவ்வளவு ஷாட்களை தடுத்த வேறு கோல்கீப்பர் யாருமில்லை. கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில், 7-க்கும் மேற்பட்ட ஆன்-டார்கெட் ஷாட்களை எதிர்கொண்டும் ஒரு கோல் கூட வாங்காமல் 'க்ளீன் ஷீட்' சாதனை படைத்த ஒரு சில கோல்கீப்பர்கள் பட்டியலில் இந்த 40 வயது வீரர் இடம்பிடித்துள்ளார்.

44
கேப் வெர்டேவின் ஆனந்தக் கண்ணீர்

தங்கள் முதல் உலகக் கோப்பையில் விளையாடும் கேப் வெர்டே என்ற சின்னஞ்சிறு நாடு, முன்னாள் உலக சாம்பியனான ஸ்பெயினை சமநிலையில் தடுத்து நிறுத்தி ஒரு புள்ளியைப் பெற்றிருக்கிறது. இது, வொசின்ஹா என்ற அந்த 40 வயது வீரரின் ஆனந்தக் கண்ணீராக மாறியுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள அந்த சிறிய தீவு நாடு முழுவதும் இப்போது கொண்டாட்ட அலைகள் தான். சாத்தியமில்லாததை சாத்தியமாக்கிய தங்கள் காவல் தேவதையை அந்த நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories