New Director for Rajinikanth and Kamal Film Leak: கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணையும் புதிய படத்தின் இயக்குனர் மற்றும் படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த புதிய படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர்.சி விலகியிருப்பது, தமிழ் சினிமா வட்டாரங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் வெளியான செய்திகளில், சுந்தர்.சியின் சம்பள விவகாரமும் அவர் கேட்ட ‘பர்ஸ்ட் காப்பி’ முறை தயாரிப்பையும் ராஜ்கமல் ஏற்கவில்லை என்பதால் இந்த படத்தில் இருந்து அவர் விலகியதாக கூறப்பட்டது.
25
ரஜினிக்கு கதை பிடிக்கவில்லையா?
ஆனால், பின்னர் வெளியான தகவல்கள் இந்த விவகாரத்தை வேறு திசைக்கு அழைத்து சென்றது. எந்த நிதி பிரச்னையும் இல்லை, முக்கிய சிக்கல் கதையில்தான் ஏற்பட்டது என கமல்ஹாசன் தெளிவாக விளக்கினார். “ரஜினிக்கு பிடிக்கும் கதை வேண்டும்” என்று அவர் நேராகச் சொல்லியதால், சுந்தர்.சி கொண்டுவந்த ஸ்கிரிப்ட்கள் சூப்பர் ஸ்டாரின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இல்லை என துகள்கள் வெளியாகின.
35
ரசிகர்களின் கேள்வி:
இதன் காரணமாக ரசிகர்களிடையே புதிய கேள்விகள் எழுந்துள்ளன. பல ஹிட் படங்களை கொடுத்த சுந்தர்.சி கதை தேர்வில் தவறிவிடுவாரா? ஒரு கதை மட்டுமே இல்லையெனில், மற்றொரு கதை அவரால் உருவாக்க முடியாதா? என சுந்தர்சிக்கு ஆதரவாக பல ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை கமெண்ட் மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தெரிவித்து வருகிறார்கள்.
45
உண்மை என்ன?
ஆகவே, சுந்தர்.சி விலகலுக்குப் பின்னால் உண்மையில் கதை பிரச்னையா, அல்லது வெளியில் தெரியாத வேறு காரணங்கள் உள்ளனவா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதற்கான தெளிவை விரைவில் சுந்தர்.சி தருவார் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
55
புதிய அறிவிப்பு:
இதே நேரத்தில், ‘மகாராஜா’ படத்தை இயக்கிய நித்திலன், சமீபத்தில் ரஜினியை சந்தித்து புதிய ஸ்கிரிப்ட் ஒன்றை கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதோடு, பல இயக்குனர்கள் ரஜினியை அணுகி பல கதைகள பரிந்துரைக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்தின் வரவிருக்கும் 75வது பிறந்தநாள்... டிசம்பர் 12க்கு முன்னதாகவே புதிய படத்தின் கதை உறுதி செய்யப்பட்டு, அந்நாளில் பெரிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு அதிகம் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.