பிக் பாஸ் வீட்டில் 94 நாள்... ஸ்ருதிகா அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

First Published | Jan 10, 2025, 12:28 AM IST

Shrutika Arjun in Bigg Boss 18 Salary: பிக் பாஸ் 18வது சீசனில் ரசிகர்கள் மனதை கவர்ந்த ஸ்ருதிகா, திடீரென வெளியேற்றப்பட்டார். 94 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த அவருக்கு ரூ.20 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமாவில் இருந்து விலகி, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் கவனம் பெற்ற ஸ்ருதிகா, பிக் பாஸ் மூலம் மேலும் பிரபலமானார்.

Shrutika Arjun in Hindi Bigg Boss 18th Season

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசனில் ரசிகர்களின் பாராட்டை பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் ஸ்ருதிகா. பிக் பாஸ் வீட்டில் ஸ்ருதிகாவின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததன. ஒவ்வொரு எபிசோடிலும் அவருக்கு ரசிகர்கள் பெருகினர்.

Shrutika Salary in Bigg Boss Season 18

கடினமான டாஸ்குகளை அவர் துணிச்சலாக எதிர்கொண்டார். விளையாட்டுகளில் சரியான ஐடியாவை உருவாக்கி கலக்கினார். பல சந்தர்ப்பங்களில் உணர்ச்சிவசப்பட்ட ஸ்ருதிகா மகிழ்ச்சியிலும் சோகத்திலும் இயல்பாக வெளிப்பட்டார். வெளிப்படையான பேச்சு சக போட்டியாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது.

Tap to resize

Shrutika Elimination

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 13 வாரங்களும் 3 நாளும் இருந்த ஸ்ருதிகா திடீரென வெளியேற்றப்பட்டுள்ளார். மொத்தம் 94 நாள்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்திருக்கிறார் ஸ்ருதிகா. இப்போது அவர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவரது சம்பளம் எவ்வளவு என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

Shrutika Eviction

ஸ்ருதிகா ஒரு வாரத்துக்கு ரூ.1.5 லட்சம் சம்பளம் பெற்றார் என்று சில ரிப்டோர்டுகள் கூறுகின்றன. மொத்தமாக பிக் பாஸ் 18வது சீசனில் கலந்துகொள்ள சுமார் 20 லட்சம் ரூபாய் ஸ்ருதிகாவுக்கு சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Shrutika Arjun

பழைய காலத்து நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் ஸ்ருதிகா அர்ஜுன். இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தமிழில் ஸ்ரீ என்ற படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு, ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.

Shrutika Wedding Photos

ஸ்ருதிகா நடித்த படங்கள் சுமாரான வெற்றியைப் பதிவு செய்திருந்தாலும், அவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் ஆர்வத்தை இழந்துவிட்டார். இதனால், அர்ஜுன் ராஜை கரம்பிடித்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

Shrutika in Bigg Boss 18

2022ஆம் ஆண்டில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்த ஸ்ருதிகா, தொடர்ச்சியாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தோன்றினார். இந்த நிலையில்தான் இந்தியில் 18வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பல ரசிகர்கள் மனதில் ஸ்ருதிகா இடம்பிடித்துள்ளார்.

Latest Videos

click me!