நீதிமன்றத்தில் இருந்து திரும்பிய இளைஞர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

First Published | Apr 18, 2023, 10:38 AM IST

தென்காசியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் பொதுமக்கள் மத்தியில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர். 

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த  கிடாரகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துதுப்பாண்டி மகன் மணிகண்டன்(23). பொக்லைன் ஆபரேட்டராக உள்ளார். இவர் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது இவரை ஒரு கும்பல் ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு உயிர் பயத்தில் அங்கிருந்து ஊருக்குள் ஓடினார்.

ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட தூரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tap to resize

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த 2020ம் ஆண்டு ஆடு திருட்டு சம்பந்தமாக சிலர் மீது, மணிகண்டன் போலீசில் தகவல் கொடுத்துள்ளார். இதனால், அவருக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இதன் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே தனது மகன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது பெற்றோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. 

Latest Videos

click me!