சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமலா(35). திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக ராஜா வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் ராஜா சரியாக வீட்டிற்கு வருவதில்லை.