டெல்லி ஓக்லாவில் உள்ள மெட்ரோ லிப்ட்டுக்குள் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். 26 வயதான, ராஜேஷ் குமார் கோஹ்லி, ஒரு மருத்துவமனையில் வீட்டு பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் ஏப்ரல் 4ஆம் தேதி நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசுக்கு அழைப்பு வந்தது. அதன்பிறகு ஏப்ரல் 4 ஆம் தேதி காவல்துறையினர் ஜசோலா அப்பல்லோ மெட்ரோ நிலையத்தை அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில், தான் மெட்ரோ லிப்டைப் பயன்படுத்தும்போது, ஒரு நபர் தனது முதுகில் தகாத முறையில் தொட்டதாகக் கூறியுள்ளார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் பல்வேறு குழுக்களை நியமித்தனர். ஒரு குழுவினர் அருகிலுள்ள கடைகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தின் பார்க்கிங் பகுதியின் காட்சிகளை சரிபார்த்தனர்.
சிறப்புக் குழுவானது வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தின் உள்ளே உள்ள சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்தது. முழுமையான பரிசோதனைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்.
அந்த காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை தேடியது போலீஸ். ரகசிய தகவலின் பேரில், ஏப்ரல் 14 அன்று சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பற்றிய விவரங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க..இனிமே இலவசம் கிடையாது.. ஐபிஎல் சீசனை காசு கொடுத்தா தான் பார்க்க முடியும் - முழு விபரம்