ஓடும் தனியார் பேருந்தில் பெண் வெட்டிப் படுகொலை.. அலறி கூச்சலிட்ட பயணிகள்.. அதிர வைக்கும் காரணம்..!

First Published | Apr 7, 2023, 1:47 PM IST

ஓடும் தனியார் பேருந்தில் பயணிகள் மத்தியில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரு​கே கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரின் மனைவி ​தமயந்தி. தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோபிக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

​இந்நிலையில் ​நேற்று மாலை ​​​வழக்க​றி​ஞரை பார்ப்பதற்காக ​தமயந்தி திண்டுக்கல்லுக்கு ​தனியார் பேருந்தில் ​புறப்பட்டார். அப்போது ராஜாங்கம் அவரின் 14 வயது மகனுடன் ஏறினார். பேருந்து வடுகப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது ராஜாங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமயந்தியை கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.

Tap to resize

இதனை கண்டு பேருந்தில் இருந்த பொதுமக்கள் அலறி கூச்சலிட்டனர். பின்னர் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியதும் மகனை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து ராஜாங்கம் தப்பினார். 

ரத்த வெள்ளத்தில் சரிந்த தமயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தமயந்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்துவிட்டு தப்பிய ராஜாங்கம் தீவிரமாக தேடிவருகின்றனர். சொத்து பிரச்சனை காரணமாக பேருந்துக்குள் வைத்து பெண் படுகொலை செய்யப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!