திருமணத்தை நிறுத்திவிட்டு.. காதலனுடன் ஓடிய மணப்பெண்.. கடைசியில் நேர்ந்த விபரீத சம்பவம்

First Published | May 30, 2023, 12:17 PM IST

திருமணத்தை நிறுத்திவிட்டு ஓடிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம், மிர்சாபூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. திருமணத்திற்கு ஒருநாள் முன்பு அந்த மணப்பெண் காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணி திட்டம் தீட்டினார்.

அதன்படி, அப்பெண்ணின் காதலனும், பெண்ணின் உறவினரும் அந்தப் பெண்ணின் வீட்டை அடைந்தனர். அவர்கள் உறவினர்களை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் மூவரும் தப்பிச் சென்றனர்.

Tap to resize

அவர்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றபோது ஒரு லாரியில் மோதினர். இந்த விபத்தில் அவள் தப்பியோட உதவிய உறவினர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!