கயிற்றால் கழுத்தை இறுக்கி கணவர் கொலை.. மகள் கேட்ட ஒற்றை வார்த்தை.. தற்கொலை செய்து கொண்ட தாய்..!

Published : Aug 27, 2023, 12:12 PM ISTUpdated : Aug 27, 2023, 12:15 PM IST

தாலி கட்டிய கணவனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
13
கயிற்றால் கழுத்தை இறுக்கி கணவர் கொலை.. மகள் கேட்ட ஒற்றை வார்த்தை.. தற்கொலை செய்து கொண்ட தாய்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (45). எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஜெயந்தி (36). இவர்களுக்கு சந்தோஷ் (19) என்ற மகன், தீபிகா (14) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், சந்தோஷ் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இவரது மகள் துர்கா தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். 

23

நேற்று இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயந்தி கணவர் ரங்கசாமியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடலை அறையில் வைத்து, அதன் மீது துணிகளை போட்டு ஜெயந்தி மூடி மறைத்து வைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல நடமாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயந்தியின் மகள் தீபிகா அப்பா எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. 

இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்! எவ்வளவு சொல்லியும் கேட்காத புருஷன்! அர்ச்சகருக்கு நடந்த ரத்த அபிஷேகம்! நடந்தது என்ன?

33

இதுதொடர்பாக தீபிகா தனது பாட்டியிடம் கூறியுள்ளார். பதற்றத்துடன் ஓடி வந்த பாட்டி மகனை தேடியுள்ளார். அப்போது அறையில், ரங்கசாமி சடலம் துணிகளால் மூடப்பட்டு கிடந்ததை கண்டு  அதிர்ச்சியில் அலறியபடி வெளியே ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் ஜெயந்தி அப்பகுதியில் இருந்த  கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- மனைவியிடமே மருமகளை படுக்கைக்கு அனுப்புமாறு கேட்ட மாமனார்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

click me!

Recommended Stories