இதையடுத்து சுந்தர்ராஜின் மனைவி நிவேதாவை சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவரின் செல்போனை ஆய்வு செய்த போது தினேஷ் என்ற இளைஞருடன் அதிக நேரம் பேசியதும் தெரியவந்தது. பின்னர், இருவரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், பெங்களூருவில் இருந்து சுந்தர்ராஜ் சொந்த ஊருக்கு வந்ததும் நிவேதா அங்குள்ள தனியார் பள்ளிக்கு ஆசிரியை வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி தோழி வித்யாவின் மூலமாக தினேஷ் அறிமுகமாகியுள்ளார்.