பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்.. உண்மையா? பொய்யா? உண்மை கண்டறியும் சோதனையில் பகீர்..!

First Published | Mar 13, 2023, 3:35 PM IST

விக்கிரவாண்டி அருகே ஏரிக்கரையில் தனியாக பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவனை தாக்கி விட்டு மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த இரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவனும், மாணவியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி இரவு 7 மணியளவில் இருவரும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியான கப்பிலியாம் புலியூர் ஏரிக்கரையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு மர்ம நபர்கள் 3 பேர் இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர். மேலும் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக முதலில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 

Tap to resize

குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால்,  குற்றவாளிகள் குறித்து  எந்த துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவனும், மாணவியும் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர். இருவரும் கூறியது உண்மையா என்பதை அறிய அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது.

அதில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும், டி.என்.ஏ. மற்றும் மருத்துவ பரிசோதனை முடிவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். 
 

Latest Videos

click me!