வெளிநாட்டு பெண்ணை கதறவிட்ட அதிகாரி.. ஆபாச படம் எடுத்து டார்ச்சர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!

First Published | Mar 13, 2023, 1:42 PM IST

போலந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக மும்பை நிறுவனத்தின் உயர் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் அந்தேரி பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மனிஷ்காந்தி.

34 வயதான இந்த வாலிபர் மீது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் போலந்து நாட்டைச் சேர்ந்த அம்போலி என்பவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

போலந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தேரியைச் சேர்ந்த நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி மீது மும்பை காவல்துறை சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tap to resize

இந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்ட மணீஷ் காந்தி, ஆசிய வணிக கண்காட்சிகள் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். புகாரின்படி, காந்தி 2016 மற்றும் 2022 க்கு இடையில் வெளிநாட்டு பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அந்த பெண் காந்தியின் நிறுவனத்தில் நவம்பர் 2016 முதல் பணிபுரிந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல், தன்னை மிரட்டுவதற்காக காந்தி நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததாகவும் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

மணீஷ் காந்தி மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 375 (கற்பழிப்பு), 354 (பாலியல் துன்புறுத்தல்), 354C (வயியூரிசம்), 509 (ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதித்தல்), மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை  மணீஷ் காந்தி மீது எந்த நடவடிக்கையும் போலீஸ் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..ஆஸ்கர் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' & ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ - வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்கள் யார் யார்.?

Latest Videos

click me!