உத்தரபிரதே மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, 16 வயது மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர்.
ஆனால், எப்படியாவது அந்த கும்பலிடம் தப்பித்து விட வேண்டும் என்பதால் மாணவி கடுமையாக போராடியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் வலுக்கட்டாயமாக அந்த மாணவியின் வாயில் சானிடைசரை ஊற்றி குடிக்க வைத்தனர். இதனை தடுக்க முயன்ற மாணவியின் சகோதரரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
பின்னர், அந்த மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மயக்க நிலையில் கிடந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.