எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டியா! என் பொண்டாட்டி கூட பழகுவதை நிறுத்திடு! ஆத்திரத்தில் நண்பன் கொலை..!

First Published | Jul 30, 2023, 1:18 PM IST

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனைவியுடன் பழகியதால் நண்பனை மீன் வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் கருப்பசாமி (36). அடிக்கடி ஜெயபிரகாஷ் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது ஜெயபிரகாஷ் மனைவிக்கும் கருப்பசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ஜெயபிரகாஷ் மனைவியுடன் பழகுவதை நிறுத்துமாறு கண்டித்தார். ஆனால் கருப்பசாமி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் பழகி வந்துள்ளார்.  இதனால் ஜெயபிரகாஷ் அங்கிருந்து தனது குடும்பத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போடி பரமசிவன் கோவில் தெருவில் குடியேறினார். ஆனால் மீண்டும் கருப்பசாமி அவரது மனைவியுடம் பழகி வந்ததாக  கூறப்படுகிறது. 

Tap to resize

இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ் நைசாக உன்னிடம் பேச வேண்டும் என கருப்புசாமி அழைத்துள்ளார். அதன்படி அவர்கள் 2 பேரும் சேர்ந்து மது குடித்தனர். கருப்பசாமிக்கு போதை தலைக்கேறியபோது ஜெயபிரகாஷ் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையே ஜெயபிரகாஷ்  போடி  காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos

click me!