illegal love
கரூர் மாவட்டம் கருப்பம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(25). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த கோபிகா(19) என்ற பெண்ணை காதலித்து கடந்த மாதம் 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஆனால் கோபிகா கிருஷ்ணமூர்த்திக்கு சகோதரி முறை உறவு என்பதால் பெண்ணின் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கடந்த 21-ம் தேதி வழக்கு தொடர்பாக திருச்சி தொட்டியத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு காரில் வந்தார். பின்னர், வேலை முடிந்ததும் அதே காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். இதை எப்படியோ அறிந்த கோபிகாவின் உறவினர்கள் மற்றொரு காரில் வந்து வழிமறித்து கிருஷ்ணமூர்த்தியை கடத்தினர். நீண்ட நேரமாகியும் கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி மனைவி கோபிகா தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ஸ்ரீநாத் (24), கார்த்திக் (25), சரவணன் (29), கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கிருஷ்ணமூர்த்தியை காரில் கடத்திச்சென்று அவரை கொலை செய்து கல்லணை ஆற்றில் உடலை வீசிவிட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றி ரவிவர்மன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த கோபிகாவின் சித்தி இந்திரா, சித்தப்பா பிரகாஷ், ரவிவர்மனின் நண்பர்கள் பத்திரி, மோகன் ஆகியோர் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த 10 நாட்களில் மணப்பெண்ணின் குடும்பத்தினரே மணமகனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.