திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ப்ரீ-கேஜி படிக்கும் 3 வயது சிறுவனின் கைகளை நைலான் கயிற்றால் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர், பள்ளி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த கொடூரம் அம்பலமானது.
திருவாரூரில் 3 வயது சிறுவனை கட்டி வைத்து தாக்கிய ஆசிரியை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீ-கேஜி படிக்கும் 3 வயது சிறுவனை, நைலான் கயிற்றால் கட்டி வைத்து ஆசிரியை ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பதை கவனித்த பெற்றோர், பள்ளியின் சிசிடிவி காட்சிகளை பார்த்தபோதுதான் இந்த பகீர் சம்பவம் தெரியவந்தது.
எச்சரிக்கை: கீழே உள்ள வீடியோவில் மனதை பதைபதைக்க வைக்கும் காட்சிகள் உள்ளன.
This is how a 3-yr-old boy's hands were tied and callously treated by staff at a pvt school in Tiruvarur distric. His family has also alleged that he was beaten up. @imrajmohan https://t.co/EYrSmUrG1s
— Srivatsal Subramaniam (@SVatsal14825) November 19, 2026
3 வயது சிறுவனை கைகளை கட்டிப்போட்டு தாக்கியதாக புகார் ஆசிரியை, உதவியாளர் மீது வழக்குப்பதிவு
திருத்துறைப்பூண்டியில் உள்ள சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வகுப்பறையில் சிறுவனை கட்டி வைக்கும் இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
25
காயங்களை பார்த்து சிசிடிவியை செக் செய்த பெற்றோர்
செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பதை பெற்றோர் கோபிநாத் மற்றும் மகிமா கவனித்தனர். இதுபற்றி விசாரித்தபோது, தன்னுடைய ஆசிரியை மற்றும் ஒரு ஆயா தன்னை அடித்ததாக அந்த குழந்தை கூறியுள்ளது.
பள்ளியில் தங்கள் மகன் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த பெற்றோர், நேராக பள்ளிக்கு சென்று விளக்கம் கேட்டனர். அப்போது, சிறுவனின் தந்தை கோபிநாத் வகுப்பறையின் சிசிடிவி காட்சிகளை செக் செய்தார்.
35
நைலான் கயிற்றால் கட்டப்பட்ட குழந்தையின் கைகள்
சிசிடிவி காட்சிகளில், ஆசிரியை பாக்கியலட்சுமி குழந்தையின் கைகளை நைலான் கயிற்றால் கட்டுவது பதிவாகியுள்ளது. மேலும், செல்வி என்ற பள்ளி உதவியாளர், அந்த சிறுவனை பள்ளிக்குள் ஒரு திரையில் வைத்து அழுத்துவது போலவும் காட்சிகள் இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்த கோபிநாத், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுவனை தாக்கிய ஆசிரியை, உதவியாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.
பெற்றோரின் புகாரை தொடர்ந்து, போலீஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர். புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பெண்கள், 26 வயதான ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் திருத்துறைப்பூண்டி அண்ணா நகரை சேர்ந்த 55 வயதான பள்ளி உதவியாளர் செல்வி என்பது தெரியவந்துள்ளது.
55
பள்ளி பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் வைரல் வீடியோ
இந்த சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பள்ளிகளில் இளம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் பள்ளியின் தரப்பு விளக்கம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.