இந்தியாவில் சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு பெருநகரத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்கள் ஆகிய குற்றங்களோடு, இப்போது சைபர் க்ரைம் எனப்படும் இணையவழி குற்றங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஒரே ஒரு வீடியோ காலுக்கு இளைஞர் ஒருவர் ரூ.6.50 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.