இதில் ஆத்திரமடைந்த மதுரை வீரன், தான் வைத்திருந்த கத்தரிகோலை எடுத்து சித்ராவின் வயிறு, கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இங்கு இருந்தால் தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று நினைத்த மதுரை வீரன், வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார்.