என் வாழ்க்கையே உன்னால தாண்டா நாசமா போச்சு.. நடுரோட்டில் லாரி ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை.. பகீர் பின்னணி.!

First Published | Apr 27, 2023, 8:58 AM IST

பட்டப்பகலில் நடுரோட்டில் லாரி ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் இந்தரம் கிராமத்தை சேர்ந்தவர் கனகய்யா. இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளும், அதே ஊரை சேர்ந்த மகேஷ் (24) என்ற வாலிபரும் காதலித்துள்ளனர். இவர்கள் காதலித்த போது இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்துள்ளார். 

இந்நிலையில், திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.  ஆனால், தன்னை தொடர்ந்து காதலிக்கும்படி மகேஷ் விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றது. அப்படி இருந்த போதிலும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோவை காண்பித்து தொல்லை கொடுத்துள்ளார். 

Tap to resize

மேலும் அவரது கணவருக்கு அந்த நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனால், மனவேதனை அடைந்த கணவர் 6 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Telangana

இவ்வளவு நடந்த பிறகும் விடாமல்  மகேஷ் தொல்லை கொடுத்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நேற்று மகேஷ், இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணின் வீட்டு முன்பு வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் குடும்பத்தினர், அவரை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர்  அங்கிருந்த கல்லை தூக்கி தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்தனர். 

women arrested

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Latest Videos

click me!