என்ன நடிப்புடா சாமி.. உல்லாசத்துக்காக புருஷனையே போட்டு தள்ளிய கொடூர மனைவி! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

First Published | Apr 24, 2023, 10:50 AM IST

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை போட்டு தள்ளிவிட்டு மாயமானதாக நாடகமாடி மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பூங்கொடிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன்(39). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லூர்துமேரி. தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தினமும் மாலை 7 மணிக்கு வேலைக்கு செல்லும்  ஞானசேகரன் மறுநாள் காலை 8 மணிக்குத்தான் வீடு திரும்புவார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 29ம் தேதி இரவு வேலைக்கு சென்ற ஞானசேகரன் மறுநாள் காலை வரை வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த மனைவி லூர்துமேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  மாயமான ஞானசேகரனை தேடிவந்தனர். 

Tap to resize

illegal love

இதனிடையே சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வம்(40) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்த போது ஞானசேகரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

illegal love

இது தொடர்பாக செல்வம் போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்தார். அதில், செல்வத்துக்கும், ஞானசேகரின் மனைவி லூர்துமேரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. நாளடைவில் இந்த விவகாரத்தை அறிந்த ஞானசேகரன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில், கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவரை கொலை செய்ய மனைவி மற்றும் கள்ளக்காதலன் திட்டமிட்டனர். அதன்படி போதை தலைக்கேரும் அளவிற்கு ஞானசேகருனுக்கு மது குடிக்க வைத்துள்ளார். பின்னர்,  செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் ஞானசேகரன் உடலை அங்கேயே குழிதோண்டி புதைத்ததும் தெரியவந்தது.

கணவரை போட்டு தள்ளிவிட்டு மாயமானதாக நாடகமாடி மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள செல்வத்தின் நண்பரை தேடிவருகின்றனர்.

Latest Videos

click me!