ஒரு நைட்டுக்கு 80 ஆயிரம்.. மாடல் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்த பிரபல நடிகை கைது.!!

First Published | Apr 23, 2023, 9:01 AM IST

மாடல் அழகிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பிரபல நடிகையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

விபச்சாரத்திற்கு மாடல்கள் சப்ளை செய்யப்பட்ட ராயல் பாம் ஹோட்டலில் மும்பை காவல்துறை அதிரடி சோதனை நடத்தியது. போஜ்புரி நடிகை சுமன் குமாரியை விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தியதற்காக கைது செய்தது.

இதுகுறித்து மும்பை காவல்துறை வட்டாரங்கள், “மும்பை, ஆரே காலனி பகுதியில் உள்ள ராயல் பாம் ஹோட்டலில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குற்றவாளிகளை சிக்க வைக்க நடிகை சுமன் குமாரியிடம் பேச போலி வாடிக்கையாளரை போலீசார் ஓட்டலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tap to resize

ஒவ்வொரு மாடலுக்கும் 50,000 முதல் 80,000 ரூபாய் வரை விலை பேசும் போது நடிகை சுமன் குமாரியை போலீசார் கையும், களவுமாக பிடிபட்டார். நடிகை தற்போது போலீஸ் காவலில் உள்ளார், மேலும் பாலியல் மோசடியில் ஈடுபட்ட மற்ற நபர்களை அடையாளம் காணவும் கைது செய்யவும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இதையும் படிங்க..12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்

இதுபோன்ற உயர்மட்ட பாலியல் மோசடிகள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு மாடல்களை சப்ளை செய்யும் போஜ்புரி நடிகை சுமன் குமாரிக்கு வயது 24 ஆகிறது. மாடல்களை வைத்து பாலியல் தொழிலில் அவர்களை ஈடுபடுத்தினார். அவர்களின் பணத்தேவையை புரிந்து கொண்டு தவறான தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.

நடிகை சுமன் குமாரி, பல போஜ்புரி படங்களில் பணியாற்றியுள்ளார். லைலா மஜ்னுவைத் தவிர, அவர் பாப் நம்பி பீட்டா தஸ் நம்பி போன்ற போஜ்புரி நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் செய்துள்ளார். இது தவிர, நடிகை பூம் OTT சேனலிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..iQOO : இப்படியொரு ஆஃபர் கிடைக்காது.. iQOO ஸ்மார்ட்போன்களுக்கு 25,000 வரை ஒரிஜினல் தள்ளுபடி - முழு விபரம்

Latest Videos

click me!