Crime News: நிர்வாணமாக மனைவியை கொலை செய்தது ஏன்? ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய கணவர்.. எப்படி தெரியுமா?

Published : Apr 21, 2023, 01:51 PM ISTUpdated : Apr 21, 2023, 01:56 PM IST

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு காணவில்லை என நாடகமாடிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

PREV
15
Crime News: நிர்வாணமாக மனைவியை கொலை செய்தது ஏன்? ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய கணவர்.. எப்படி தெரியுமா?

சென்னை வியாசர்பாடி காந்திபுரம் திடீர் நகரை சேர்ந்தவர் ஜீவா (45). பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். சரிதா(38) என்ற பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. சரிதா கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். 

25

இந்நிலையில் ஜூவாவுக்கு மனைவி நடத்தையில் திடீரென சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று திரும்பிய நிலையில் ஜூவா மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

35

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால், ஆத்திரமடைந்த ஜீவா வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் சரிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த  சரிதா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். என்ன செய்வது என்று தெரியாத ஜூவா மனைவியின் உடலை பாயில் சுருட்டி குளியலறையில் வைத்துள்ளார். 

45

நேற்று காலையில் எதுவும் தெரியாதது போல சரிதாவை காணவில்லை என்று கணவர் ஜூவா கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  எதைச்சையாக சரிதாவின் வீட்டுக்கு சென்று பார்த்த போது குளியலறையில் நிர்வாண நிலையில் அவரது உடல் பாயில் சுருட்டியவாறு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டனர். 

55
arrested

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத கொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த ஜூவாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்தப்பட்ட விசாரணையில் தாம்பத்திய உறவுக்கு அழைத்த போது வரமறுத்ததாலும்,  நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார்.  இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் ஜீவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories