சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை நெல்சன் மாணிக்கம் ரோடு சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் லோகிதக்கன், காவலர் வெள்ளதுரை ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருசக்கர வாகனத்திற்கான ஆவணங்களை போலீசார் கேட்ட போது இந்த இருசக்கர வாகனம் தன்னுடைய உறவினருடையது என கூறியுள்ளனர்.
அப்போது ஆவணம் வீட்டில் உள்ளதாக கூறி செல்போனில் ஒருவரை தொடர்பு கொண்டு போலீசார் தங்களை பிடித்துவிட்டதாகவும், உடனே சம்பவ இடத்திற்கு வருமாறும் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பெண் ஒருவர் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் பிடிப்பட்ட நபர்களை விடுவிக்குமாறு கூறி வாக்குவாதம் செய்து போலீஸ்காரங்க எல்லாருமே பிராடு தான் என்று ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். women
இதனை காவலர் வெள்ளதுரை வீடியோவாக பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண் நாற்காலி இருந்த போலீஸ்காரரின் தொப்பியை எடுத்து அவர் மீது வீசி எறிந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, காவலர் வெள்ளைத்துரை அளித்த புகாரின் பேரில் அக்ஷயா, சத்யராஜ் மற்றும் வினோத்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். அக்ஷயா போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.