உன்னோட சைஸ் என்ன? டபுள் மீனிங் பேச்சு.. மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர்.!

First Published | Apr 19, 2023, 8:22 AM IST

இரட்டை அர்த்தத்தில் பேசி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர் கருப்பையா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (58). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவரை நடப்பு கல்வியாண்டு முடியும் வரை மேலும் 3 மாதங்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதன்படி கருப்பையா பணி நீட்டிப்பில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், உளவியல் துறையில் முதுநிலை 2-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு கருப்பையா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அந்த மாணவி பல்கலைக்கழக நிர்வாகத்தில் புகார் அளித்தார். பாலியல் புகார்களை விசாரிக்கும் ஆணையம் விசாரணை நடத்தியது. 

Tap to resize

விசாரணையில் முடிவு எட்டப்படாததால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் மதுரை சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து டிஐஜி பொன்னி உத்தரவின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பேராசிரியர் கருப்பையா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த சில மாதங்களாகவே கருப்பையா மாணவிகளிடம் உன் ஜூன்ஸ் பேன்ட் சைஸ் என்ன, ஒல்லியாக இருக்கும் பெண்களை தான் பசங்க விரும்புவார்கள், இரட்டை அர்த்தத்திலும் பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

Latest Videos

click me!