குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தை அடுத்த விங்கியா பகுதியை சேர்ந்தவர் மக்வானா (38). இவரது மனைவி ஹன்சா பென்(35). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மாந்திரீக பூஜைகளில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். கடந்த சில மாதங்களாகவே வீட்டிலேயே நாள்தோறும் மாந்திரீக பூஜைகளை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
gujarat
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ஹோமகுண்டத்தில் நெருப்பு வளர்த்து பூஜை செய்த இந்த தம்பதி மறுநாள் காலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
gujarat
ஹோம குண்டத்தை உருவாக்கிய தம்பதி, தலையை துண்டாக்கும் வகையில் பிரத்யேக இயந்திரம் தயாரித்துள்ளனர். பின்னர், அந்த இயந்திரத்தில் தம்பதியினர் தங்கள் தலைமை தாங்களே துண்டித்து நரபலி கொடுத்துக் கொண்டனர். மேலும், தலை உருண்டு சென்று குண்டத்தில் விழும் படி ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் இவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், குழந்தைகள் மற்றும் பெற்றோரை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் தற்கொலை கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர். தம்பதி தங்களை தாங்களே நரபலி கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.