இன்ஸ்டாகிராம் காதல்.! ப்ளஸ் 1 மாணவியை சீரழித்த காதலன்! தோழிகள் உடந்தை! பகீர் சம்பவம்

Published : Apr 24, 2023, 07:42 AM IST

கன்னியாகுமரி அருகே இன்ஸ்டாகிராமில் பழகி பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
15
இன்ஸ்டாகிராம் காதல்.! ப்ளஸ் 1 மாணவியை சீரழித்த காதலன்! தோழிகள் உடந்தை! பகீர் சம்பவம்

கேரளா மாநிலம், எர்ணாகுளம், காலடி பகுதியை சேர்ந்தவர் அஜின் சாம். இவரது நண்பர்கள் அகிலேஷ் ஷாபு, ஜிதின் வர்கீஸ், பூர்ணிமா தினேஷ், சுருதி சித்தார்த். இதில் உள்ள அஜன் சாம் கடந்த சில மாதம் முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியிடம் நெருக்கமாக பழகியுள்ளார்.

25

பிறகு அந்த மாணவியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி காரில் களியக்காவிளை வந்த அஜின் சேம் மற்றும் நண்பர்கள் மாணவியை உடன் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் நெய்யாற்றின் கரையில் உள்ள நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

35

அங்கு அஜின் சாம் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். 18 ஆம் தேதி மாணவியை அவரது வீட்டருகில் விட்டு விட்டு சென்றுள்ளனர். மறுநாள் முதல் அஜின் சாம் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.

இதையும் படிங்க..ஒரு நைட்டுக்கு 80 ஆயிரம்.. மாடல் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்த பிரபல நடிகை கைது.!!

45

இதனால் சந்தேகம் அடைந்த மாணவி நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் தெரிவித்தார். உடனடியாக களியக்காவிளை அருகேயுள்ள பாறசாலை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் எர்ணாகுளத்தில் சென்று சம்மந்தபட்ட 5 நபர்களையும் கைது செய்தனர்.

55

விசாரணையில் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் பெண் நண்பர்களையும் அழைத்து வந்ததாக தெரிகிறது. இந்த கும்பலால் வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா ? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவியை கடத்தி திருமணம் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..iQOO : இப்படியொரு ஆஃபர் கிடைக்காது.. iQOO ஸ்மார்ட்போன்களுக்கு 25,000 வரை ஒரிஜினல் தள்ளுபடி - முழு விபரம்

Read more Photos on
click me!

Recommended Stories