தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த இளைஞர் மாணவியும் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இளைஞர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை தனிமையில் அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
மாணவியுடன் உல்லாசமாக இருந்ததை அவருக்கு தெரியாமலேயே தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். வீடியோவை பார்த்த நண்பர்கள் 2 பேரும் மாணவியை எப்படியாவது அடைய வேண்டும் என்று திட்டமிட்டனர். அந்த வீடியோவை காட்டி மிரட்டி தங்களுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறினர். ஆனால் இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார்.
தங்களுடன் உல்லாசமாக இருக்கவில்லை என்றால் ஆபாசா வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவி காதலனின் 2 நண்பர்களுடனும் உல்லாசமாக இருந்தார்.
அதனையும் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் அவர்களின் நண்பர்கள் 3 பேருக்கு வீடியோவை அனுப்பி வைத்தனர். அவர்களும் வீடியோவை காட்டி மிரட்டி மாணவியை பலாத்காரம் செய்தனர்.
நாளுக்கு நாள் இவர்களது தொல்லை அதிகரிக்கவே வேறு வழியில்லாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.